உங்கள் ஆதரவு அவசியம்
சண்டமாருதம் என்பது ஶ்ரீவைஷ்ணவ சம்பிரதாய விஷயங்களை பகிர்வதற்காக உருவாக்கப்பட்ட ஒரு தமிழ்ப் பத்திரிகை. அடியோங்களுடைய அறக்கட்டளையின் நோக்கம், தேர்ந்த ஞானம் கொண்ட வித்வான்களிடம் இருந்து கதை-கவிதை-கட்டுரைகள் பெற்று, அதை அனைத்து மக்களுக்கும் உபயோகமாகும் வகையில் இந்தப் பத்திரிகை மூலம் பதிவிடுவது.
இந்த பத்திரிகை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வெளியிடப்படும் மற்றும் இலவசமாக கிடைக்கும். இப்பத்திரிகையின் மூலம், ஶ்ரீவைஷ்ணவ சமயத்தின் ஆழ்ந்த உட்கருத்துக்களையும், தத்துவங்களையும், ஐதீஹ்யங்களையும் அனைவருக்கும் எளிய முறையில் எடுத்து செல்ல விரும்புகிறோம். பத்திரிகையின் உள்ளடக்கம் பெரும்பாலும் தமிழிலும், தேவைப்பட்டால் ஆங்கிலத்திலும் தேவநாகரி லிபியிலும் இருக்கும்.
இந்தப் பத்திரிகை Sri KKC Periyappangar Swamy Trust (Regd) என்னும் நிறுவனத்தால் தொடங்கப்பட்டு, நிர்வகிக்கப்படுகிறது. இந்த பத்திரிகை தொடர்பாக ஏதேனும் கருத்துக்கள், ஆலோசனைகள் அல்லது பங்களிப்புகள் இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளலாம்.
எங்கள் பத்திரிகையை படித்து மகிழுங்கள்!
இந்த பத்திரிகை இலவசமாக விரும்பிய வாசகர்களிடம் சென்று அடைய உதவும் வகையில், விளம்பரங்கள் மற்றும் நன்கொடைகள் மூலம் நிதி திரட்ட உத்தேசம்.
உங்களுக்கு இந்த பத்திரிகையை ஆதரிக்க விருப்பமிருந்தால், உங்களுக்கு தெரிந்த விளம்பரதாரர்களை எங்களுக்கு அறிமுகப்படுத்த கேட்டுக்கொள்கிறோம். இந்த வெப்ஸைட்டில் உள்ள "Advertise" என்ற பக்கத்தின் மூலமோ, editor@kkcp.chandamarutham.org என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்.
உங்கள் உதவிக்கு நன்றி!
அறக்கட்டளையின் வங்கி விவரங்கள்:
| கணக்கு பெயர் | Sri KKC Periyappangar Swamy Trust |
|---|---|
| வங்கி | ICICI Bank |
| கிளை | Nandanam Branch, Chennai - 600 035 |
| கணக்கு எண் | 234701000444 |
| கணக்கு வகை | Savings Account |
| IFS Code | ICIC0002347 |








